காரியாபட்டி :
காரியாபட்டி லயன்ஸ் கிளப் மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. லயன்ஸ் கிளப் துணைத்தலைவர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.
கிரீன் பவுண்டேஷன் நிர்வாகி பொன்ராம் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார். நிகழ்ச்சியை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல் மற்றும் தண்ணீரை சிக்கனபயன்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் தண்ணீர் இன்றைய கட்டுப்பாடு இன்றி கிடைக்க நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், லயன்ஸ்கிளப் செயலாளர் விக்டர், பொருளாளர் ராமசாமி, இயக்குனர்கள் செந்தில்குமார், பாஸ்கரன், முனிஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.