புதுக்கோட்டை: புதுக்கோட்டை தமுஎகச மாவட்டக்குழு சார்பில்இந்தி ஆதிக்க எதிர்ப்பு மற்றும் கல்வி உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
தமுஎகச மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முத்துநிலவன் மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார். தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரை ஆற்றினார். கவிஞர் ஜீவி தமிழ்ச் செம்மல் விருது பெற்ற கவிஞர் ரமா ராமநாதனைப் பாராட்டினார்.மாவட்டத்தில் கிளைகள் தோறும் கருத்தரங்கம் நடத்த கிளை நிர்வாகிகளுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மாநில துணைத்தலைவர் நீலா,மாநிலக்குழு உறுப்பினர் தனிக்கொடி, கவிஞர் எஸ். இளங்கோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் ஸ்டாலின்சரவணன் வரவேற்றார்.மாவட்டப்பொருளாளர் கீதா நன்றி கூறினார்.
இதில், ஆசிரியர் அமைப்பு,மாணவர் அமைப்பு ,கலை இலக்கிய அமைப்பு தோழர்கள் , மாநில,மாவட்டக்குழு தோழர்கள், பொதுமக்கள் கருத்தரங்கில் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக சுகந்தியின் மக்களிசை நிகழ்வு நடைபெற்றது.