Close
மார்ச் 29, 2025 8:23 மணி

மேயர் தலைமையில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்..!

மேயர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

மதுரை:

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சித்ரா விஜயன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், வரி திருத்தம் வேண்டி 13 மனுக்களும், பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு, சாலை வசதி, தெருவிளக்கு மற்றும் அடிப்படை வசதி வேண்டி 14 மனுக்களும், சுகாதாரம் தொடர்பாக 2 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 6 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 2 மனுக்களும் என மொத்தம் 37 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது.

தொடர்ந்து, மண்டலம் 1 வார்டு எண்.14 புதூர் மண்மலை மேடு கல்குளம் மற்றும் தண்டலை வாய்க்கால் பகுதிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்வது குறித்து, மேயர், ஆணையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக, மண்டலம் 3 வார்டு எண்.50 வைகை தென்கரை அனுமார் கோவில் படித்துறை பகுதியில் உள்ள அனுப்பானடி வாய்க்கால் தூர்வாரும் பணியினை, மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தேவையற்ற குப்பைகளை உடனுக்குடன் அகற்றி மழைநீர் சீராக செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறினார்.

இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் வாசுகி, பாண்டிச்செல்வி, உதவி ஆணையாளர் மணியன், செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், செயற்பொறியாளர் சேகர், உதவி வருவாய் அலுவலர் லோகநாதன், உதவிப் பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top