Close
மார்ச் 29, 2025 8:16 மணி

என்.சி.சி.எப் மூலம் நெல் கொள்முதல் : காஞ்சிபுரம் விவசாயிகள் மகிழ்ச்சி..!

நெல் கொள்முதல் நிலையம்

என்.சி.சி.எப் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விரைவாக நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

மேலும் விவசாயிகளிடம் கூடுதலாக கொள்முதலை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நபரைப் பருவத்தில் சுமார் 80,000 ஏக்கர் விளை நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை காலம் துவங்கி உள்ளதால் மத்திய, மாநில அரசுகள் சார்பாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த சில நாள் முன்பு துவங்கி கொள்முதல் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தேசிய கொள்முதல் முகமையான ( என்சிசிஎப்) காஞ்சிபுரம் மாவட்டத்தில் 33 இடங்களில் நேரடியாக விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்து வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த விச்சந்தாங்கல் பகுதியில் செயல்படும் கொள்முதல் நிலையம் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடமிருந்து உரிய ஆவணங்களை பெற்று முன்னுரிமையின் அடிப்படையில் விவசாயிகள் அழைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

எடை மற்றும் தரம் உள்ளிட்டவைகளில் முறையாக ஆய்வு செய்யப்படுவதால் விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் தங்கள் நெல்லை கொள்முதல் செய்ய ஒப்புக்கொள்கின்றனர்.

மேலும் எந்தவித முறை கேட்டுக்கும் இடம் அளிக்காமல் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்பகுதியில் விவசாயிகளின் நெல் உலர்த்த பெரிய உலர் களம் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க சுமார் 40,000 மூட்டைகள் அடுக்கும் வகையில் பெரிய பாதுகாப்புடன் உள்ளிட்டவை உள்ளதால் விவசாயிகள் இந்த இடத்தை அதிக அளவில் தேர்வு செய்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், என்சிசிஎப் மூலம் தரமாக, எவ்வித முறைகேடு இன்றி நெல் கொள்முதல் செய்யப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவிக்கின்றனர்.

மேலும் விவசாயி ஏக்கர் ஒன்றுக்கு 30 மூட்டையில் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்ற இலக்கினை மறுபரிசீவினை செய்து கூடுதலாக கொள்முதல் செய்ய மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top