Close
மார்ச் 30, 2025 9:00 மணி

நெசவு கூலியை ரொக்கமாக வழங்க நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

காஞ்சிபுரம் கைத்தறி துணி நூல் துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நெசவாளர்கள் நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு கையில் தட்டு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெசவு வேலைக்கான கூலியை வங்கி கணக்கு மூலம் வழங்குவதை தவிர்த்து, ரொக்கமாக வழங்க கோரி பட்டு கூட்டுறவு நெசவாளர் சங்க முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டு நடவடிக்கை குழுவினர் சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம்.

காஞ்சிபுரம் கைத்தறி துணி நூல் துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நெசவாளர்கள் நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு கையில் தட்டு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள் தங்கள் நெசவு செய்து கொண்டு வரும் வேட்டி சேலைகளுக்கு நெசவு கூலியாக ரொக்க பணம் பெற்று வந்த நிலையில்,

தமிழ்நாடு முழுவதும் கைத்தறி நெசவாளர்களின் நெசவுக்கான கூலியை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என கைத்தறி துணி நூல்துறை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

நெசவுக்கான கூலியை வங்கி மூலம் வழங்கும் கைத்தறி துறையின் ஆணையை காஞ்சிபுரத்தில் உள்ள பட்டு கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்த தொடங்கி உள்ளது.

நெசவு தொழிலுக்கான கூலியை வங்கி கணக்கில் செலுத்த நடைமுறையால் எழுத படிக்க தெரியாது நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி பட்டு கூட்டுறவு சங்க கைத்தறி நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள்,மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக, நெசவாளர்களுக்கான நெசவு கூலியை வங்கியில் செலுத்துவதை கண்டித்தும், வழக்கம் போலவே நெசவாளர் கைகளில் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நெசவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கைத்தறி துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஓன்று கூடி நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு, கையில் தட்டு ஏந்தி
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் கைத்தறி துணி நூல் துறை துணை இயக்குனரிடம்
நெசவு தொழிலுக்கான கூலியை தொடர்ந்து ரொக்கமாகவே கூட்டுறவு சங்கங்களிலேயே வழங்க வேண்டும் என கூட்டு நடவடிக்கை குழுவினர் மற்றும் நெசவாளர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர் .
ஆர்ப்பாட்டத்தில் முருகன் பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் வள்ளி நாயகம், இயக்குனர் கே யு எஸ் சோமசுந்தரம்,சி ஐ டி யு கைத்தறி சம்மேளனத் தலைவர் முத்துக்குமார், சி ஐ டி யு செயலாளர் கே ஜீவா, பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் விஸ்வநாதன், வாசு,யுவராஜ், உள்ளிட்ட ஏராளமான நெசவாளர் சங்க உறுப்பினர்களும் நெசவாளர்களும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top