கொலை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க துப்பாக்கியுடன் காட்சி நகரில் வலம் வரும் காவல்துறையினர் ..
காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரபல ரவுடி வசூல்ராஜா இளைஞர்களால் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இச்ச சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் முக்கிய குற்றப்பகுதிகளாக கருதப்படும் திருக்காலிமேடு, பொய்யாகுளம், கோனேரி குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை வேலைகளில் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் மூன்று பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க சுழற்சி முறையில் இந்த பகுதிகளில் காவல்துறையினர் துப்பாக்கியுடன் பலம் வருவதால் பொதுமக்கள் சற்று மன நிம்மதியும் அதே நேரத்தில் குற்றவாளி கொடுத்து அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.