Close
மார்ச் 31, 2025 3:48 மணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு துவங்கியது..!

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவிகள்

68 மையங்களில் 7502 மாணவர்களும், 7836 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்..

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பொது தேர்வுகள் 10 , 11 மற்றும் 12-ம் வகுப்பு நடைபெறும் என அட்டவணை வெளியிட்டது. அவ்வகையில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான அரசு பொது தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு தமிழக முழுவதும் துவங்குகிறது .

இன்று துவங்கும் இந்த அரசு பொது தேர்வு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 68 மையங்களில் அரசு பொதுத்தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.

தேர்வு துவங்கும் முன்பு மாணவர்களுக்கான ஆலோசனைகளில் தேர்வு மைய கண்காணிப்பாளர் வழங்கி எந்தவித ஒழுங்கினமின்றி தேர்வு எழுத அறிவுறுத்தினார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7502 மாணவர்களும், 7836 மாணவிகளும், 232 மாற்றுத்திறனாளி மாணவர்களும், 115 தனித் தேர்வுகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 885 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு மையங்களில் மாணவர்கள் மற்றும் தேர்வு அறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட தனித் தேர்வர்கள் , கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என கூறும் வகையில் ஆர்வமுடன் தேர்வு எழுத வந்துள்ளனர். மேலும் சிறப்பு மாணவர்களுக்கான தனி நபர்களும் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதி வருகின்றனர்.

தேர்வுகளை கண்காணிக்க 1103 ஆசிரியர்களும் அவர்களை கண்காணிக்க 93 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top