ரூபாய் 86 லட்சம் உபரி வருமானமாக நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செயல்படும் மாநகராட்சிகளின் நிதிநிலை அறிக்கை அந்தந்த மாநகராட்சியில் வெளியிடப்பட்டு வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 2025 – 2026 க்காண நிதிநிலை அறிக்கையினை மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் இன்று மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
இதில் வருவாய் மற்றும் மூலதன நிதியாக 253.10 கோடியும், குடிநீர் மற்றும் வடிகால் நிதியாக 407.06 கோடியும், கல்வி ரீதியாக 13.04 கோடி என மொத்தம் 673 கோடியே 20 லட்சம் ரூபாய் வரவினங்களாக உள்ளது.
இதேபோல் செலவினங்களாக மொத்தம் 672 கோடியே 34 லட்சம் என திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூபாய் 86 லட்சம் உபரியாக உள்ளதாக இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பாக நத்தப்பேட்டை தேனம்பாக்கம் மற்றும் பொன்னேரி கரை ஏரிகளை பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து புனரமைத்து பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் எனவும்,
அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு நினைவு பூங்காவில் பெண்கள் உடற்பயிற்சி கூடம் அமைக்க 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வண்ணம் கிரிக்கெட் வலை பயிற்சி மைதானம் பேட்மிட்டன் ஷெட்டில் கார்க் என பல வகைகளில் விளையாட்டு திடல் அமைக்க 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அச்சுறுத்து வகையில் செயல்படும் நாய்களை கணக்கெடுத்து, அதனை பிடித்து கருத்தடை செய்வது , பிற கால்நடைகளை பிடிக்கவும் ரூபாய் 50 லட்சம் ஒதுக்கிடும் புதிய நாய்கள் கருத்தடைமையம் அமைக்க ரூபாய் 75 லட்சம் நிதி அரசிடம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் நேந்திரன் , மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.