Close
ஏப்ரல் 1, 2025 5:03 மணி

போலீஸ் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்..!

சாலை மறியலில் ஈடுபட்ட கொலை செய்யப்பட போலீசின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்

உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருகே காவலர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து தற்போது ,உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்த நபர்களுக்கு அறிவுரை வழங்கும் போது ஏற்பட்ட தகராறின் காரணமாக நாவார்பட்டி அருகே ஹரிஹரன் என்பவரது தோட்டத்தில் வைத்து காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.

காவலருடன் வந்த கள்ளபட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ,இந்த சம்பவம் தொடர்பாக அவரது உடல் வைக்கப்பட்டுள்ள உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு இன்று குற்றவாளிகளை கைது செய்ய கோரி காவலரின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என, உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இருந்த போதும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை காவலரின் உடலை வாங்க மாட்டோம் என, உறவினர்கள் தெரிவித்து மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top