காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே கோடை காலத்தினை யொட்டி தண்ணீர் பந்தலை கழக கொள்கை பரப்பு செயலாளர் வைகை செல்வன் , முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் திறந்து வைத்தார்.
வழக்கம்போல் பொதுமக்கள் பழங்களை சூறையாடி சென்ற காட்சியும் நடைபெற்றது
தமிழகம் முழுதும் கோடை காலம் ஆரம்பித்து பொதுமக்களை கடும் வெயில் வாட்டி வருகிறது. வழக்கமான இயல்பை விட மூன்று முதல் ஐந்து செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக முழுவதும் பொதுமக்கள் நலன் கருதி தண்ணீர் பந்தல் திறக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகை செல்வன் மற்றும் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சரமான சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை தெரிந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், கூழ், கரும்புசாறு மற்றும் தர்பூசணி , வெள்ளரி, கீரணி பழ வகைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் போதே பொதுமக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல வகைகளை வழக்கம்போல் சூறையாடி சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்