வாடிப்பட்டி:
மதுரை வடக்குமாவட்டம் தே.மு.தி.க.வாடிப்பட்டி, அலங்காநல்லூர், கொட்டாம்பட்டி ஒன்றியகழக செயலாளர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த முத்துப்பாண்டிக்கு பதிலாக சோலை.சசிக்குமாரும், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியசெயலாளராக இருந்த தெய்வேந்திரனுக்கு பதிலாக ஆர்.நாகராஜ் என்பவரும், அலங்காநல்லூர் மேற்குஒன்றியசெயலாளராக இருந்த சிவசத்தியசீலனுக்கு பதிலாக அழகர்சாமி என்பவரும்,
அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றியசெயலாளராக இருந்த ஸ்ரீபாலமுருகனுக்கு பதிலாக பிச்சைமணி என்பவரும், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த சந்தனபீர் ஒலிபுல்லாவுக்கு பதிலாக ஏ.ரவி என்பவரும் 27ந்தேதி முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்,வார்டு,ஊராட்சி, கிளைகழகநிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் முழுஒத்துழைப்பு கொடுத்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும் என்று கழக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.