Close
ஏப்ரல் 1, 2025 6:34 மணி

‘நிறங்களின் வழியே உலகம்’ : ஓவியக் கண்காட்சி திறப்பு விழா..!

ஓவியக் கண்காட்சியை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்த சிறப்பு விருந்தினர்

மதுரை:

மதுரை இ.எம்.ஜி. யாதவா பெண்கள் கல்லூரி பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவி க.அருந்தமிழ் இலக்கியாவின் ” நிறங்களின் வழியே உலகம்” ஓவியக் கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது.

மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, கதைசொல்லி பசுமலை பாரதி தலைமை வகித்தார். கவிஞர் செ.தமிழ்ராஜ் வரவேற்புரையாற்றினார்.
ஓவியக் கண்காட்சியை, ஓவியர், சிற்பக்கலைஞர் வ.சரண்ராஜ் திறந்து வைத்தார்.

அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன், சோக்கோ இணை இயக்குநர் செல்வகோமதி, தமுஎகச மதுரை புறநகர் மாவட்ட தலைவர் ஓவியர் வெண்புறா, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ஓவியர் ஸ்ரீரசா, ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினர்.

நாவலாசிரியர் பொன். விக்ரம், எழுத்தாளர் மதுரை நம்பி, ஓவியர் வெண்ணிலா ஆகியோர் ஓவியம் குறித்துப் பேசினர். ஊடகவியலாளர் ப கவிதா குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top