Close
ஏப்ரல் 1, 2025 6:22 மணி

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்..!

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது

சோழவந்தான் :

சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றத்தை முன்னிட்டு காலை கோவிலில் இருந்து அர்ச்சகர் பார்த்தசாரதி திருவிழாகொடி மற்றும் பொருட்களை எடுத்து சோழவந்தானின் நான்கு விதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் வந்தடைந்தது.

தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் திருவிழாகொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் உபயதாரர் கன்னியப்பன் முதலியார் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். எஸ். ராஜாங்கம், கோவில் செயல் அலுவலர் பொறுப்பு இளமதி,ஆய்வாளர் ஜெயலட்சுமி, மற்றும் அறங்காவலர்கள் பெரியசாமி, எஸ் எம் பாண்டியன், ஆண்டியப்பன், மங்கையர்கரசி உட்படபக்தர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top