உத்திரமேரூர் அருகே பாஜகவினர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்து அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தினர்.
தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட நூறு நாள் பணியாளர்களுக்கு மத்திய அரசு நான்கு மாதங்களாக நிலுவை தொகை விடுவிக்கததை கண்டித்து நேற்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட படூர் கூட்டுச் சாலையிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் அதே படூர் கூட்டுச் சாலையில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில், ஒன்றிய தலைவர் ரஜினி ஏற்பாட்டில் போலீசார் அனுமதி இன்றி பாஜக வினர் கொடி கம்பங்கள் மற்றும் ஸ்பிக்கர் பாக்ஸ் வைத்து தீடிரென ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உத்திரமேரூர் பொறுப்பு காவல் ஆய்வாளர் சங்கர் சுப்பிரமணியன் தலைமையிலான இருபதுக்கும் மேற்பட்ட போலீசார் இந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வாங்க வில்லை . அனுமதி வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி கொள்ளுங்கள் என கூறி பாஜக கொடி கம்பங்கள் மற்றும் ஸ்பிக்கர் பாக்ஸ் ஆகியவையை அகற்ற வலியுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தை மாற்றி இந்த இடத்தில் சமச்சீர் கல்வி கையெழுத்து இயக்கம் நடத்த போகிறோம் கொடிக்கம்பம் அகற்ற வேண்டாம் என காவல் ஆய்வாளர் இடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் போலீசார் அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்க முடியாது பொதுமக்கள் மீது கொடி கம்பம் விழுந்தால் யார் பொறுப்பு ஏற்பது என பாஜக நிர்வாகிகள் இடம் தெரிவித்ததை தொடர்ந்து கொடிக்கம்பம் மற்றும் ஸ்பிக்கர் பாக்ஸ் அங்கிருந்து வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.