கல்வி கொடை வள்ளல் என அழைக்கப்படும் பச்சையப்ப முதலியார் அவர்களின் 231 வது நினைவு தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்வி நிறுவனங்களில் அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முதலியார் அமைப்புகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
கல்வி கொடை வள்ளல் என அழைக்கப்படும் பச்சையப்பன் முதலியார் 1754 முதல் 1794 வரை வாழ்ந்து நிலையில் கல்விக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிறுவி அனைவரும் கல்வி கற்க வழி வகை செய்தார்.
இது மட்டுமல்லாது பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை என நிறுவி தற்போது வரை பள்ளிகள் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
இன்று அவரின் 231 வது நினைவு தினத்தை ஒட்டி காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் கல்லூரி முதல்வர் முனைவர் கோமதி தலைமையில், பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் அவருக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கல்லூரி மாணவிகளுக்கு அலுவலக ஊழியர்கள் சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இதேபோல் பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சோமசுந்தரம் வைகை செல்வன், திமுக மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பாஜக மாவட்ட செயலாளர் ஜெகதீசன், செந்தில்குமார் மற்றும் உலக பிள்ளைமார் சங்கம் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொண்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியும், காலையில் சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்தனர்.
இதேபோல் பல்வேறு கல்வி நிறுவனங்களில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.