தமிழ் மாநில காங்கிரஸ் காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பில் சிறு காவேரிப்பாக்கம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள் பழங்கள், பழரசம், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை உண்டு மகிழ்ந்தனர்
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாகவே கோடை வெயில் தாக்கம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை சராசரி வெப்பத்தை விட மூன்று டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள், வானிலை ஆய்வர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோடை காலங்களில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் பந்தல் மற்றும் உடல் வெப்பத்தை தணிக்கும் வகையில் மோர் பழரசம் என அளிப்பது வழக்கம்.
அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமிழ் மாநில (மூப்பனார்) காங்கிரஸ் சார்பில் சிறுகாவேரிப்பாக்கம் அருகே காஞ்சிபுரம் மாநகர தலைவர் சங்கர் ஏற்பாட்டின் பேரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் பழ வகைகள் என அளித்தார்.
இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று குளிர்பானங்கள் பழங்களை உண்டு உடல் வெப்பத்தை தணித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிராமி சங்கர், விஷார்கார்த்திக், சசிகுமார் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த நிலையில் சிறுவர்கள் பெரியவர்கள் என பழங்களை முண்டியடித்துக் கொண்டு அள்ளி சென்று காட்சியும் காண முடிந்தது.