காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி வீரசோழனில் இந்திய தேசிய லீக் மற்றும் கே.எஸ்.ஓ அறக்கட்டளை சார்பில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு கிராம மக்கள் அனைவருக்கும் இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் பஷீர் அகமது பொதுமக்க ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் . தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர், ஜமாத் தலைவர் சம்சுதீன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சாதிக் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஜமாதி நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.