Close
ஏப்ரல் 2, 2025 5:50 காலை

மடப்புரம் காளி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு : ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க முடிவு..!

கோயில் நிலம் -கோப்பு படம்

சோழவந்தான் :

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் சில இடங்கள் சோலைக்குறிச்சி முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்களை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

 

மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் மார்கழி பூஜைக்காக நிலக்கோட்டை சோலைக்குறிச்சி போத்தி நாடார்,சி காத்தார், சுப்பையா நாடார், வீ ‌‌காத்தார் நாடார் , சி.தொ.காத்தார் நாடார், வெள்ளைய முக்கந்தர் நாடார் ஆகியோர் 13 ஏக்கர் நிலத்தை 1930 ஆம் ஆண்டு வழங்கினர். நாளடைவில் பலரும் அதனை போலியான ஆவணங்கள் மூலம் நிலங்களை அவரவர் பெயரில் பட்டா மாறுதல் செய்து ஆக்கிரமித்து இருந்தனர்.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு ஆறு மாத காலத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்றி நிலங்களை கையகப்படுத்த கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சோழவந்தான் மேம்பாலம் அருகே உள்ள இடங்கள் ரயில் நிலையத்தை தாண்டி உள்ள அனேக இடங்கள் சோலைக்குறிச்சி பகுதியில் உள்ள இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிவகங்கை அறநிலைத்துறை அதிகாரிகள் இணை ஆணையர் பாரதி மதுரை உதவி ஆணையர் வளர்மதி கோயில் உதவி ஆணையர் கணபதி முருகன் சோழவந்தான் சோலைக்குறிச்சி முள்ளிப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வந்து ஆய்வு செய்தனர்.

இதே போல மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் பத்து கோடி மதிப்பில் உள்ள
13 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த இடத்தில் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் என எச்சரிக்கை பலகையும் வைத்தனர். இதன் காரணமாக சோழவந்தான் பகுதியில் அதிகப்படியான வீடுகள் இடிபடும் அபாயம் உள்ளதாக தெரிகிறது. மடப்புரம் காளி கோயிலுக்கு சொந்தமான இடம் எது எது என்று சோழவந்தான் பத்திரபதிவு அலுவலகத்தில் நோட்டீஸ் போர்டில் சர்வே எண்ணுடன் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஆகையால் சோழவந்தான் பசும்பொன் நகரின் குறிப்பிட்ட பகுதியில் மடப்புரம் காளி கோயிலுக்கு சொந்தமாக உள்ள இடங்கள் மற்றும் வீடுகளை அரசு விரைவில் கையகப்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top