Close
ஏப்ரல் 2, 2025 10:05 மணி

அரசு இடத்தை சொந்தம் கொண்டாடும் தனிநபர்..! கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..!

புகார் மனு கொடுக்க வந்த கிராம மக்கள்.

குன்றத்தூர் அடுத்த ஒரத்தூர் ஊராட்சி உட்பட்ட நீலமங்கலம் பகுதியில் அரசு இடத்தை தனிநபர் உரிமைக் கொண்டாடும் நிலையினை தடுக்க வலியுறுத்தியும், அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி க்கு ஒரத்தூர் ஊராட்சியின் கீழ் சிற்றுராக இருக்கும் நீலமங்கலம் கிராமத்தில் ஆரம்ப துணை சுகாதாரம் நிலையம் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான நிதி 41 லட்சம் க்கு கோரப்பட்ட நிலையில், பதினைந்தாவது நிலை குழு மான்ய திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மாதம் பூமி பூஜை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தனது தந்தை தனக்கு தானமாக அளித்த இடம் எனக் கூறி உள்ளார்.

இந்நிலையில் இந்த தான பத்திரம் மோசடியாக உருவாக்கப்பட்டது எனவும் , அதற்கு உறுதுணையாக செயல்பட்டு உள்ளதும் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பத்திரம் பெறப்பட்டதன் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கிராமத்தை சேர்ந்த சுந்தர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட அலுவலர் வெங்கடேஷ்யை சந்தித்து போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்கும் இடத்தினை தடுத்து நிறுத்த கோரியும், மேலும் மோசடி பத்திரப்பதிவு மேற்கொண்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் மக்களின் சுகாதார நலன் கருதி அதே இடத்தில் துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டவும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top