Close
ஏப்ரல் 2, 2025 9:52 மணி

தவெக சார்பில் தீப்பிடித்து வீடுகளை இழந்தவர்களுக்கு உதவிகள் வழங்கல்..!

காஞ்சிபுரம் அடுத்த வேடல் பகுதியில் நடைபெற்ற தீ விபத்தில் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், சாலையோரம் வசித்து வரும் குடும்பத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் சமையல் பாத்திரங்கள், அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..

காஞ்சிபுரம் அடுத்த காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேடல் கிராமத்தில் 350 க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைக்காரர்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் சேட்டு ஜோசியம் பார்த்தும், அவரது மனைவி அஞ்சலா துணிப் பைகள் விற்று வரும் நிலையில் அவர்களுக்கு இரண்டு ஆண் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை குழந்தைகள் வீட்டில் இருந்த நிலையில் திடீர் மின் கசிவு மற்றும் வெயில் காரணமாக அவர்கள் தங்கி இருந்த குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

வீட்டில் இருந்த உணவுப் பொருட்கள் பள்ளி குழந்தைகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் ரேஷன் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் அனைத்தும் எரிந்த நிலையில் அப்பகுதியில் அக்கிராமசாலை ஓரம் வசித்து வந்தனர்.

இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழக ஒன்றிய நிர்வாகிகள் உடனடியாக மாவட்ட செயலாளர் தென்னரசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரின் அறிவுரையின்படி ஒன்றிய செயலாளர் வினோத், ஏற்பாட்டின் பேரில் சமையல் உபகரணங்கள், அரிசி மளிகை பொருட்கள் மற்றும் வேட்டி சேலை மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் குழந்தைகளுக்கான படிப்பு புத்தகங்கள் என அனைத்தும் சுமார் 15,000 மதிப்பில் எடுத்துச் சென்று குடும்பத்தினரை சந்தித்து வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.

தங்குமிடமில்லாதது குறித்து அக் குடும்பத்தினர் தெரிவிக்கையில் உடனடியாக ஒரு வாரத்திற்குள் அந்த வீட்டின் அருகே உள்ள பகுதியில் சிறிய வீடு கட்டித் தருவதாக நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள் வேலு விஜி சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top