அரசு திட்டங்களுக்கு எம் சாண்ட் பயன்படுத்தப்படுவதால் தரமற்ற முறையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த கடந்த 2012 முதல் ஆற்றுப்படுகில் உள்ள ஆற்று மணல்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஒரு கட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் அரசு விதிகளை மீறி செயல்படுவதாக இருந்த புகாரின் பேரில் 2015 காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆற்றுப்படுகையில் மணல் அல்ல தடை விதிக்கப்பட்டது.
அப்போது விதிகளை மீறி ஆற்றில் அள்ளப்பட்ட மணல் யார்டுகள் எனும் பகுதியில் சேமிக்கப்பட்ட நிலையில் அதனை அரசு கையகப்படுத்தியது.
அவ்வகையில் காஞ்சிபுரம் இளையனார் வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளிமேடு பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 2.5 லட்சம் யூனிட் மணல் யார்டுகளிலேயே கிடப்பதால் எந்த பயனும் இல்லாத நிலையும் உள்ளது.
இந்நிலையில் தற்போது நீர்வள துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து இதனை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது அரசு திட்ட பணிகளில் பல்வேறு பணிகள் ஊரக வளர்ச்சி முகமை திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு ஒரு நிலையில் இந்த மணலை அரசு ஒப்பந்ததாரர்களுக்கு அரசு விற்க வேண்டும் எனவும், தற்போது எம்சாண்ட் கொண்டு பணிகள் மேற்கொண்டு வருவதால், பள்ளி கட்டிடங்கள் குடியிருப்புகள் தரமற்ற முறையில் ஒப்பந்ததாரர்களால் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு சில பள்ளிகளில் மேற்கூரை பூச்சு விழுந்து அரசுக்கு அவப்பெயரும் ஏற்படுத்தி வரும் நிலையில் தனி நபர்களுக்கு தராமல் அரசு திட்ட பணிகளுக்கு மட்டுமே இந்த மணலை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனb பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள மணலை அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த நபர்கள் திருட்டுத்தனமாக அள்ளி செல்லும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.