வரவு எட்டணா செலவு பத்தணா எனும் சினிமா பாடல் போல் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு..
காஞ்சிபுரம் அடுத்த மாபெரும் அருகில் செய்யாற்றின் குறுக்கே கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் துவக்கப்பட்டு 2019ல் கட்டி முடிக்கப்பட்டது.
அதன் பிறகு செய்யாற்றின் பல வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து தடுப்பணை அருகே உள்ள பகுதிகள் கடும் சேதம் அடைந்து காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த தடுப்பணியில் நீர் சேமிக்க முடியாத நிலையில் மணல் தடுப்பணை உயரத்திற்கு சேர்ந்து உள்ளதால் இங்கு தடுப்பணை கட்டியது வீண் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் செய்யாற்றில் செல்லும் நீரினை அருகிலுள்ள காவாந்தண்டலம் கிராம ஏரிக்கு செல்லும் வகையில் உபரிக்கால்வாய் உள்ளது. ஆனால் அதனையும் முறையாக தூர்வாராத நிலையில் நீர் அங்கும் செல்லாமல் அப்பகுதி விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
இந்த நிலையில் நீர்வள ஆதார துறையினர் இந்த தடுப்பணை சேதத்தினை சரி செய்யவும், காவாந்தண்டலம் ஏரிக்கு செல்லும் கால்வாய் கட்டவும் என ரூபாய் 18 கோடிக்கு மதிப்பீடு அரசுக்கு அனுப்பி வைத்த நிலையில் அதற்கான அறிவிப்பு சட்டமன்ற கூட்டத்தில் வெளியாகி உள்ளது.
இது விவசாயிகள் இடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டும்போது முறையாக கூடுதல் நிதி பெற்று கட்டியிருந்தால் சிறிது கோடி மட்டுமே செலவாகி இருக்கும் ஆனால் தற்போது தடுப்பணை கட்டியது போல் மற்றொரு தடுப்பணை கட்ட வேண்டிய அளவிற்கு உண்டான நிதியும் இதற்கு ஒதுக்கியது அதிர்ச்சி அளித்துள்ளது.
பழைய சினிமா பாடலில் கூறுவது போல வரவு எட்டணா .. செலவு பத்தணா.. கடைசியில் என்ற வரிக்கு ஏற்பது போலே நிச்சயம் உள்ளது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.