Close
மே 20, 2025 9:24 மணி

தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

காசி விஸ்வநாதர் கோயில் -கோப்பு படம்

தென்காசி மாவட்டத்தின் நகர் பகுதியில் அமைந்துள்ள பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழம்பெரும் கோயிலான காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டும் தென்காசி மாவட்ட நிர்வாகத்தால் 07.04.2025 மற்றும் 11.04.2025 ஆகிய நாட்கள் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தற்போது அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவருக்கும் அந்தப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறைக்கு மாற்றாக 26.04.2025 மற்றும் 03. 05.2025 ஆகிய நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கும்பாபிஷேகம் மற்றும் பங்கு உத்திரம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் உள்ளூர் விடுமுறை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top