மதுரை:
மதுரை ஏற்குடி அச்சம்பத்து எஸ்.வி.கே.நகரில் உள்ள மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியின் 5வது ஆண்டு விழா நடைபெற்றது.
பள்ளி நிறுவனர் சார்லஸ் தலைமை வகித்தார். கெவின் வரவேற்றார்.பள்ளி தாளாளர் நித்தியா தேவி முன்னிலை வகித்தார் .கெவின் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மிட்லாண்ட் தியேட்டர் அதிபர் கண்ணன், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செளந்தரராஜன்,தமிழ் இலக்கிய மன்ற நிறுவனர் அவனி மாடசாமி அவனிமாடசாமி, தொழிலதிபர் ஆண்டனி மைக்கேல் விஜயன், சின்னத்திரை கலைஞர் நாஞ்சில் விஜயன் , தொழிலதிபர் லெனின்ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சியில் நடைபெற்றது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், குழந்தைகளை பெற்றவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளைப் செல்வி. ப்ரீத்தி ஜெனிபர் தொகுத்து வழங்கினார்.
ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் இணைந்து செய்து இருந்தனர். முடிவில், அக்ஷிதா நன்றி கூறினார்.