அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், பாலமேடு வடக்கு தெரு பொது மகாசபைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு செல்லத்தம்மன் காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பங்குனி மாதத்தை ஒட்டி மழை வேண்டியும் உலக நன்மை வேண்டியும் கனி மாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
500- க்கும் மேற்பட்ட பெண்கள் பழ தட்டுடன் ஊர்வலமாக வந்துசாமி தரிசனம் செய்து
கனி மாற்றி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை, பாலமேடு வடக்கு தெரு பொது மகாசபை சார்பாக செய்திருந்தனர்.