மதுரை:
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் ,கப்பலூர் டோல்கேட் அருகே 20 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றிய அதே இடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கக் கோரி, மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம் தலைமையில் மனு கொடுத்தனர்.
ஆட்சியரிடம் மனு அளித்தபோது அவனியாபுரம் மண்டலத் தலைவர் கதிரேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கப்பலூர் டோல்கேட் அமைவதற்கு முன்பு அந்த இடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலை இருந்தது. அதை அகற்றி 20 ஆண்டுகள் ஆன் நிலையில் தற்போது பாஜக சார்பில் அந்த இடத்தில் சிலை அமைக்க மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.