வெளிமாநிலங்களுக்கு தமிழக முதலீடுகள் செல்வதாக பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும், இதனால் தமிழகத்தில் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகும் என தொழில் துறை அமைச்சர் தொழில் துறை டிஆர்பி ராஜா பேட்டி.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் அமைந்துள்ள அலிசன் இந்தியா டிரான்ஸ்மிஷன் இந்தியா நிறுவனத்தின் புதிய புரிந்துணர்வு ஒப்பந்த தினத்தின் அடிப்படையில் விரிவாக்க தொழிற்சாலை பகுதியினை தமிழக தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா துவக்கி வைத்தார்.
முன்னதாக தொழிற்சாலை பகுதியினை பார்வையிட்ட அமைச்சருக்கு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேவிட் கிராஸிஓஸி செயல்பாடுகளை தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய விரிவாக்கம் தொழிற்சாலை பகுதி மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட இன்ஜின் ஆகியவற்றை பார்வையிட்டு சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அமைச்சர் டி ஆர் பி ராஜா,
பிரபல கார் நிறுவனம் ஆன BYD – தொழிற்சாலை வேறு மாநிலத்துக்கு செல்வதாக பொய் பிரச்சாரத்தை செய்ய வேண்டாம், BYD தொழிற்சாலையின் நிலை குறித்து அந்த நிறுவனமே பதில் அளித்துள்ளது,
எதிர் அணியில் உள்ளவர்கள் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம், தொழில் நிறுவனங்களை குறித்து சந்தேகங்களை நேரடியாக எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு கேட்கலாம்
இதுபோன்று பொய் செய்திகளை பரப்பி தமிழகத்துக்கு வரும் முதலீடுகளை வேறு எங்கும் திசை திருப்ப வேண்டாம்
தொடர்ந்து இதுபோன்று எதிர் அணிகள் இருப்பவர்கள் பேசுவதால் தமிழ்நாட்டில் வரக்கூடிய நிறுவனங்களை வேறு மாநிலத்துக்கு மாற்றும் நிறுவனத்துடன் கூட்டணியில் இருப்பதாக சந்தேகத்தை எழுகிறது,
இது போன்ற செயலை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்
பரந்தூர் விமான நிலையம் மக்களுக்கு பாதிப்பு அடையாதவாறு அமையும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, தொழிற்சாலை நிறுவன அதிகாரிகள் மற்றும் பண்ருட்டி ஊராட்சி மன்ற தலைவர் கி.அர்ஜீனன் மற்றும் தொழில் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.