Close
ஏப்ரல் 3, 2025 12:35 மணி

திமுக, அதிமுக கட்சிகளை மிஞ்சும் வகையில் காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தல் : தவெக அசத்தல்..!

தவெக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்

இளநீர், மோர் குளிர்பானங்கள், பழ வகைகள் உள்ளிட்டவைகளை பொதுமக்களின் கோடை தாகத்தை தணிக்க அள்ளி அள்ளி வழங்கினார்கள்.

ஏராளமான பொதுமக்கள் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பழ வகைகளை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர்.

கோடை காலம் தொடங்கி கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின் குடிநீர் தாகத்தை தணிக்க அதிமுக,திமுக உள்ளிட்ட கட்சிகள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் காஞ்சிபுரத்தில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர்
கோவில் அருகில் நடைபெற்றது.

தண்ணீர் பந்தல் திறப்பு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட பந்தலில் தர்பூசணி, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, கீரைக்காய், இளநீர், வாழைப்பழம், நீர் மோர், ரோஸ் மில்க், ஆரஞ்சு, குளிர்பானங்கள் என ஏராளமான கோடை வெப்பத்தை தணிக்க கூடியவைகள் குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தவெக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ்பிகே. தென்னரசு கலந்து கொண்டு பேண்ட் வாத்தியங்கள் முழங்க தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு பழ வகைகளையும்,குளிர் பானங்களையும்,கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு அள்ளி அள்ளி வழங்கினார்கள்.

அதிமுக,திமுக கட்சிகளை மிஞ்சும் வகையில் திறந்து வைக்கப்பட்ட
தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் திரளான பொது மக்களும் தொண்டர்களும் கலந்து கொண்டு பழ வகைகளையும் அள்ளிக்கொண்டும் குளிர்பானங்களை டம்ளர் டம்ளராக வாங்கி குடித்து விட்டு தாகம் தணிந்து தவெக நிர்வாகிகளை வாழ்த்தி விட்டு சென்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top