Close
ஏப்ரல் 5, 2025 2:12 மணி

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறணும் : காஞ்சி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு மசோதா சட்டத்தினை திரும்ப பெற கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் எஸ் கே பி தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வக்ஃபு மசோதா சட்டத்தினை திரும்ப பெற கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் எஸ் கே பி தென்னரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற அவையில் பாஜக அரசால் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு ஏக மனதாக வெற்றி பெற்றது.

இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் வக்புவாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில், 200க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் இதனை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் தொடர் போராட்டத்தை தொடரும் எனவும் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top