ஆட்டிசம் நபர்கள் குறித்த விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு மட்டுமில்லை… அவர்களை சுற்றியுள்ள மக்களுக்கு தான் அதிகளவில் தேவைப்படுகிறது என உலக ஆட்டிசம் தின விழாவில் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி பேச்சு..
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு தின விழா கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நல்லுறவு மைய கூட்ட அரங்கில் ஆட்டிசம் விழிப்புணர்வு தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் பங்கேற்க வந்த ஆட்சியருக்கு கொடுத்து குழந்தைகள் வரவேற்க கேக் வெட்டி விழா தொடங்கியது..
இதில் பேசிய ஆட்சியர் கலைச்செல்வி , உலக புற உலக சிந்தனையற்றோருக்கான ( ஆட்டிசம் ) குறித்து பெற்றோர்கள் மட்டுமல்ல அவர்களை சுற்றியுள்ளவர்களும் விழிப்புணர்வு அடைந்து அவர்களை ஊக்குவித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதலே சிறந்த வளர்ச்சியை தரும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தனியார் தொண்டு நிறுவன ஆட்டிசம் மாணவர்கள் சிறப்பான திரைப்பட பாடல் இசை இசைத்து அனைவரையும் மகிழ்ச்சியுரை செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி அவர்களுடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல் அலுவலர் மலர்விழி,ஹோப் பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவன டாக்டர் நாகராணி, சிறப்பு பயிற்சி பேச்சாளர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.