சோழவந்தான்:
மதுரை மாவட்டம் மேலூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சோழவந்தான் பேரூர் பகுதியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். விஜயன்பன் கல்லாணை தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு. மாவட்டச் செயலாளர் விஷால் கிருஷ்ணா தலைமையில் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் மதுரை மாநகர் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.