Close
ஏப்ரல் 5, 2025 8:07 காலை

வாழைக்கு மருந்து : வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்கம்..!

வாழைக்கு மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கிய வேளாண் கல்லூரி மாணவி

வாடிப்பட்டி:

மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4-ம் ஆண்டு மாணவி க.லட்சுமிகணேஷ்வரி , கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வாழையில் டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்பாடுக் குறித்து விளக்கம் அளித்தார்.

இது பனாமா வாடல், பூஞ்சை வேர்சிதைவு, தண்டு அழுகல், கிளை உதிர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது, இலைகளில் தோன்றும் கருப்பு, மஞ்சள் நிற புள்ளிகளைக் தடுக்கிறது. இவற்றை இரசாயன பூச்சிக்கொல்லிகளுடன் சேர்த்துப் பயன்படுத்தக்கூடாது, மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது பயன்படுத்துதல் நல்லது. இது மண்ணில் உள்ள நோய்தொற்றும் பூஞ்சைகளை அழிக்கிறது
என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top