Close
ஏப்ரல் 5, 2025 4:37 காலை

கோடை வெயில் வாட்டிய நிலையில் திடீர் கனமழை : மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

காஞ்சிபுரத்தில் பெய்துவரும் மழை

கடும் வெயில் காட்டி வந்த நிலையில், காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில் சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் பல்வேறு மாவட்டங்களில் வரும் ஆறாம் தேதி வரை அவ்வப்போது மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக அறிவித்தது.

அவையில் காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வார காலமாகவே கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் இன்று மாலை 4 மணி முதல் திடீரென கருமேகம் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 20 நிமிடம் பெய்தது.

மேலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top