Close
ஏப்ரல் 5, 2025 11:44 மணி

இயற்கை விவசாய வழிகாட்டல் : கண்காணிப்புக்கு குழு தலைவர் டி ஆர் பாலு வேண்டுகோள்..!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தலைவரும் , ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு தலைமையில் நடைபெற்றது.

இயற்கை விவசாயத்தால் ஏற்படும் லாபம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்கு குழு தலைவர் டி ஆர் பாலு வேண்டுகோள்..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தலைவரும் , ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு தலைமையில் நடைபெற்றது.

இதில் கைத்தறி துணி நூல் அமைச்சர் காந்தி, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன், கருணாநிதி, கரூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் துவக்க நிகழ்வாக வேளாண்மை துறை குறித்த விவாதம் துவங்கியது. இதில் பேசிய எம்.பி , டி ஆர் பாலு இயற்கை வேளாண்மை குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். அப்போது இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு எவ்வாறு எடுத்துரைக்கப்படுகிறது .

அதன் பயன்கள் பொதுமக்களுக்கு எவ்வாறு அரசு துறை மூலம் தெரிவிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார்.

அதற்கு வேளாண்மை துறை அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையை பூச்சிகள் இடம் இருந்து காத்தல் குறித்த செயல் விளக்கமும், இயற்கை வேளாண் பொருட்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கும் கூட்டங்கள் மூலம் தெரிவித்து வரப்படுகிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து பல்துறை வளர்ச்சி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கேள்விகளும் அதற்கான பதில்களையும், கூட்டத்தில் தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top