Close
ஏப்ரல் 6, 2025 6:22 காலை

கச்சத்தீவு விவகாரத்தில் அதிகாரிகள் மட்டுமே கையெழுத்து இட்டுள்ளனர் : டி.ஆர்.பாலு விளக்கம்..!

செய்தியாளர்களை சந்தித்த டி ஆர் பாலு ,

காஞ்சிபுரம் மாவட்டம் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு துறை வளர்ச்சிகள் மற்றும் தற்போதைய நிலைப்பாடுகள் குறித்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி ஆர் பாலு ,

1974 ஆம் ஆண்டு சர்வதேச எல்லை வகுப்பு இந்தியா இலங்கை இடையே ஒப்பந்தம் செய்யும் பொழுது நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என்பது விதி. ஆனால் அன்றைய ஆட்சியில் இருந்த திமுகவும் காங்கிரசும் மத்திய அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் ஒப்புதல் இல்லாமல், இரு அதிகாரிகளை வைத்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதனை அமல்படுத்தும் போது 1976 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இல்லை. கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவிற்கும் காங்கிரஸ்க்கும் சம்பந்தம் இல்லை. இது அனைத்து தரப்பு மக்களும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top