சோழவந்தான்:
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் பங்குனி திருவிழா 7ம் நாளை ஒட்டி திருக்கல்யாண வைபவம்நடந்தது வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் பெண்கள் சீர்வரிசை எடுத்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் நான்கு ரத வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து மாப்பிள்ளை பெண் அழைப்பு, மாலை மாற்றும் வைபவம், ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது,கோயில் அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் பட்டர்கள் யாக வேள்வி நடத்தி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்ய பிரகாஷ், கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜாங்கம்,
அறங்காவலர்கள் பாண்டி, பெரியசாமி, ஆண்டியப்பன், மங்கையர்க்கரசி, செயல் அலுவலர் இளமதி, ஆலய பணியாளர் முரளிதரன், உபயதாரர் சௌந்தர்யம்மாள் குடும்பத்தினர், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் கோரதத்தில் சுவாமியும் அம்பாளும் நான்கு ரத வீதிகளில் பவனி வந்தனர்.