Close
ஏப்ரல் 7, 2025 10:54 காலை

மத்திய அரசு, தமிழகத்தில் செய்த நல்ல திட்டங்களை, தமிழக முதல்வர் ஏன் பாராட்டவில்லை? தமிழிசை கேள்வி..!

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சௌந்தரராஜன்

மதுரை:

ஒரே நாடு, ஒரே தேர்தல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, செலவினங்களை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும். கச்சத்தீவு விவகாரத்தில் மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தமிழக பிரச்சினையை குறித்து பேசுவேன் உள்கட்சி பிரச்சனை குறித்து நான் பேச மாட்டேன் அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. -மாநிலத் தலைவர் குறித்த கேள்விக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பதில் அளித்தார்.

ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள  பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நல்லுறவு காண்போம் என பாலம் அமைத்துள்ளார் அதற்கு பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. தமிழகத்தில் பிரதமரால் தமிழர்களுக்கு நல்லது நடந்தால் கூட முதல்வர் நன்றி சொல்ல மாட்டார். தமிழக மக்கள் நலனுக்காக இந்தியாவிலேயே முதல் தர தொழில்நுட்பத்தால் இந்த பாலம் உருவாக்
கப்பட்டிருக்கிறது இதற்கு முதல்வர் நேரடியாக வந்து நன்றி சொல்லி வரவேற்று இருக்க வேண்டும்.

துவக்கத்திலிருந்து முதல்வர் எதிரி போக்கை கையெடுத்து வருகிறார். தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது. ஆனால், மக்களுக்கான அடிப்படை இல்லாத பிரச்சனைகளை முன்னெடுக்கிறது. மக்களை விட்டு திமுகவின் நடவடிக்கைகள் மக்களிடமிருந்து விலகி செல்கிறது.

ஆறு விவசாய பொருள்களுக்கு ஜிஐ டாக் கொடுத்து இருக்கிறார்கள். இதற்கு முதல்வர் நன்றி சொல்லி இருக்க வேண்டும். குறை மட்டும் சொல்லாமல் நல்லதுக்கு பாராட்ட வேண்டும் என்கிற குணம் வேண்டும். இல்லையென்றால் நீங்கள் வேண்டுமென்று தான் எதிரி குணத்தை காட்டுவதாக மக்கள் நினைப்பார்கள். நிர்மலா சீதாராமன் ஒரே நாடு ஒரே தேர்தல் நிகழ்வுக்கு சென்றேன். இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, செலவினங்களை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும்.

2029க்கு பிறகு அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாராளுமன்றத்தில் சண்டையிடும் போக்கையே எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துகிறார்கள். கச்சத்தீவில் தமிழக மக்களுக்கு திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அதை தாரை வார்த்தது திமுக. கச்சத்தீவு இந்தியாவின் பகுதி அல்ல என்று திமுக சொல்லி இருக்கிறது. மத்திய ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் அவர்களுக்கு இதை நினைவு வரவில்லையா. அது மட்டுமல்ல நீட் தேர்வு, தொகுதி வரையறை என அனைத்திலும் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார். தமிழக பிரச்சினையை குறித்து பேசுவேன் உள்கட்சி பிரச்சனை குறித்து நான் பேச மாட்டேன் அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை என கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top