மதுரை:
மதுரை தெற்கு ஆவணி மூல வீதி அருகே, தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை சார்பில் மகளிர் தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை மாநிலத் தலைவர் மின்னல் பிள்ளை, கொள்கை பரப்பு செயலாளர் சரவணன், அமைப்பு செயலாளர் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவி கவிதா செந்தில் மாவட்டச் செயலாளர் முத்துலட்சுமி, நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில், ஆசிரியரும் பட்டிமன்ற பேச்சாளருமான சிவ சத்யாவிற்கு சாதனை பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.