Close
ஏப்ரல் 7, 2025 10:49 காலை

வேளாண் கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு பண்ணைய முறை பயிற்சி..!

பயிற்சி வழங்கும் மாணவி

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆமணக்குநத்தம் எ‌ன்ற கிராமத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

இ‌தி‌ல் ,மதுரை வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவி சுஜிதா,ஒருங்கிணைந்த பண்ணைய முறையின் முக்கியத்துவம் மற்றும் மானாவாரி நிலத்திர்க்கு ஏற்ற ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கான எடுத்துக்காட்டு பற்றி எடுத்துரைத்தார்.

விவசாயிகளுக்கு மக்காச்சோளம் விதைக்கு உயிர் உரம் பாஸ்போபாக்டீரியா பயன்படுத்தி, விதை நேர்த்தி செய்து காட்டி மற்றும் அதன் பயனை பற்றி எடுத்துரைத்தார். படை புழுக்களை கட்டுப்படுத்த விஷத் தீனி தயாரிக்கும் முறை,அதன் பயன்பாடு ஆகியவற்றை பற்றி கூறினார். வெள்ளைஈ கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டுப்பொறி பயன்பாட்டை பற்றியும் விளக்கினார். இதில், அப்பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top