காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ 4.2 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடம் கட்டும் பணியினை எம் எல் ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார்..
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் 1977-ல் இந்து சமய அறநிலைத்துறை மற்றும் வணிகவரித்துறை ஒருங்கிணைந்த துறையாக இருக்கும் நிலையில் கட்டப்பட்ட கட்டிடம் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தற்போது நிலைகேற்ற வசதிகள் இல்லை.
இக்கோரிக்கு ஏற்று தமிழக அரசு வணிகவரித்துறை சார்பில் ரூபாய் 4 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு உத்தரவிட்டது.
அவ்வகையில் , இன்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடம் கட்டும் பணியினை துவக்கி வைத்தார்.
இந்த புதிய அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் மாநில வரி அலுவலர், உதவி ஆணையர் அலுவலகம் இணை ஆணையர் அலுவலகம் , புள்ளியியல் பிரிவு என பல அலுவலகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி காஞ்சிபுரம் மாவட்ட வணிகவரித்துறை இணை ஆணையர் வள்ளி, துணை ஆணையர் நெய்தாளி , உன் பொதுப்பணித்துறை பொறியாளர் சிவ சண்முகசுந்தரம் உதவி பொறியாளர் நந்தினி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.