தமிழக அரசு சட்டப்பேரவையில் பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரையும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீதான எந்த ஒரு செயல்பாடுகளும் இல்லை என கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட பல மசோதாக்கள் அடங்கும்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க பெரும்பாலும் நீதிமன்றங்கள் காலக்கெடு எதையும் விதிக்காமல் இருந்து வந்த நிலையில் , தற்போது தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் முதல் முறையாக மசோதா மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய காலவரம்பு நிர்ணயம் செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் திமுகவினர் பெரும் மகிழ்ச்சி கொண்டு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு காந்தி சாலையில் பட்டாசுகள் வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.