கடந்த காலங்களில் சமரசம் தோற்றாலும் தற்போது தீர்ப்பை விட தீர்வு முக்கியம் எனும் சமரசம் நிலை உருவாகியுள்ளது .. என சமரச தின விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி திரு.செம்மல் பேச்சு..
நாடு முழுவதும் இன்று நீதிமன்றங்கள் மூலம் சமரச தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சமரச தீர்வு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு சமரசத் தீர்வு மையத்தின் பயன்களை எடுத்துரைக்க வேண்டும் என்பதும் அதன் மூலம் வழக்குகள் விரைவாக தீர்வு காணும் இயலும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி திரு U. செம்மல் துவக்கி வைத்தார்.
நீதிபதிகள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் என 200க்கும் மேற்பட்ட நபர்கள் காமராஜர் சாலை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சென்று சமரசத் தீர்வு மையத்தின் பயன்கள் குறித்த துண்டு பிரசுரங்களை. பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் பேசிய மாவட்ட நீதிபதி செம்மல், கடந்த கால புராண வரலாறுகளில் கிருஷ்ணன் சமரசம் மேற்கொள்ள முயன்ற போது அது தோல்வியில் முடிந்தது.
ஆனால் இன்று சமரச தீர்வு மையம் மூலம் இருதரப்பினரும் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் செல்வதை கான முடிகிறது. தீர்ப்பை விட தீர்வு முக்கியம் என்பது அனைவரின் எண்ணம் என்பதால் சமரசம் மையம் மூலம் பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ. சரவணகுமார் , சார்பு நீதிபதி அருண் சபாபதி, கூடுதல் சார்பு நீதிபதி திருமால், தலைமை குற்றவியல் நீதிபதி
வசந்தகுமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.