Close
ஏப்ரல் 16, 2025 12:35 காலை

சோழவந்தானில் ஜெனக புஷ்ப கண்ணன் நூதனப் பிரதிஷ்டை விழா..!

ஜெனகை கண்ணன் சிலை

சோழவந்தான் :

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவிலில் உள்ள நந்தவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெனக புஷ்ப கண்ணன் சிலைக்கு நூதன பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கோ பூஜை உடன் யாக வேள்வி தொடங்கி நடைபெற்றது. பால் தயிர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்களுக்கு குங்குமப்பிரசாதம் தீர்த்தம் சடாரி வழங்கப்பட்டது.

இதில் கோவில் செயல் அலுவலர் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் மதுரை பாகவதர் கோஷ்டிகள், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டனர், கோவில் நந்தவனத்தில் பூச்செடிகள் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 4000 திவ்ய பிரபந்த வாசகம் மதுரை பாகவதர் கோஷ்டிகளால் சேவிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top