Close
ஏப்ரல் 14, 2025 7:52 மணி

சோழவந்தான் ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம்..!

ஸ்ரீ உச்சிமகா காளியம்மன் கோயில் பங்குனி உத்திர திருவிழா

சோழவந்தான் :

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பூமேட்டு தெரு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி வைத்து கும்மி பாட்டு பாடினர். அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார். உச்சமாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. முளைப்பாரி ஊர்வலத்துடன் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை எம் வி குழும தலைவர் மணி முத்தையா, கலைவாணி பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன், பள்ளி நிர்வாகி வள்ளி மயில் மணிமுத்தையா குடும்பத்தினர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top