உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்து எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மஞ்சங்காரணையில் உள்ள சமுதாயக் கூடத்தில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் டி.கே.முனிவேல் தலைமை தாங்கினார்.
அனைவரையும் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆ.சத்தியவேலு,ஒன்றிய துணைச்செயலாளர்கள் உதயசூரியன், அன்பு உதயகுமார், ராஜேஸ்வரிபாஸ்கர், ஒன்றிய பொருளாளர் குப்பன், மாவட்ட பிரதிநிதிகள் கே.வி.வெங்கடாஜலம், கண்ணபிரான்,தணிகாசலம், மாவட்ட பொறியாளர் அணி துணை தலைவர் துளசிராமன் ஆகியோர் வரவேற்றனர். தலைமைச்செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, மாவட்ட அவை தலைவர் பகலவன்,மாவட்ட துணைச் செயலாளர் உமாமகேஸ்வரி, முன்னாள் மாவட்ட வழக்கறிஞர் அணி தேவேந்திரன்,பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடாஜலபதி, குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு வரும் 19-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் வருகை தரும் தமிழக முதல்வரை சிறப்பான முறையில் வரவேற்க அனைவரும் அணி திரண்டு வர வேண்டும் என்று சிறப்புரையாற்றி பேசினார்.
இந்நிகழ்ச்சியில்,கழக கொள்கை பரப்புத்துணைச் செயலாளர் அன்புவாணன், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் சம்பத்,நீதி செல்வகுமார்,தொண்டர் அணி தியாகராஜன்,திருக்கண்டலம் மதன்,வீரமணிகண்டன், சுரேஷ், தினேஷ், சாம் கமலேசன்,ஜி.டி.எம்.கார்த்திக் மற்றும் மாவட்ட,ஒன்றிய,பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில்,உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததற்கு பாராட்டு தெரிவித்தனர்.பல்கலைக்கழக வேந்தராக தமிழக முதல்வர் பொறுப்பேற்றதற்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், தமிழ்நாடு போராடும்… தமிழ்நாடு வெல்லும்..…என்ற உறுதி மொழியை ஏற்றனர். கூட்டத்தின் முடிவில்,ஒன்றிய பிரதிநிதி வல்லரசு,கிளைச் செயலாளர்கள் ராஜேஷ், முனிவேல்,பழனி,நடராஜன் ஆகியோர் நன்றி கூறினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எல்லாபுரம் தெற்கு ஒன்றிய கழகச்செயலாளர் ஆ.சத்தியவேலு தலைமையில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.