Close
ஏப்ரல் 14, 2025 7:35 மணி

திருப்புவனம் சௌந்தரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா இரண்டாம் நாள் மண்டகப்படி..!

மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் தியாகராஜன் குடும்பத்தினர்.

சிவகங்கை :.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருள்மிகு சௌந்திர நாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரர் சுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் சுவாமிகளால் பாடல் பெற்ற தலமான திருக்கோவிலின் பங்குனி திருவிழாவில் இரண்டாம் நாள் மண்டகப்படியை முன்னிட்டு சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலமாக மண்டகப்படி உபயோதாரர்கள் இருப்பிடத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

மண்டபடியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. விழாவில் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்து சென்றனர்.

ஊர்வலத்தில் கேரள செண்டை மேளம், பொம்மலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு மின்னொளி அலங்காரத்தில் திருப்புவனத்தின் பல்வேறு பகுதிகளில் திருவீதி உலா நடைபெற்று கோவிலை வந்தடைந்தனர். அங்கு அனைவருக்கும் மரியாதை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் மயில்வேல் காந்தா குடும்பத்தினர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top