திறமையான உடற்பயிற்சி பயிற்சியாளர் மற்றும் தொடர் பயிற்சி ஆகியவை உடற்பயிற்சி உயிரிழப்புகளை தவிர்க்கும் என அர்ஜுனா விருது பெற்றவரும், உலக ஆணழகன் பாஸ்கரன் இளைஞர்களுக்கு அறிவுரை செய்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் இளைஞர்களின் உடற்பயிற்சிக்காக அதிநவீன உடற்பயிற்சி இயந்திரங்கள் கொண்ட உடற்பயிற்சி மையமாக விளங்கி வருகிறது மாஸ்டர் ஃபிட்னஸ் சென்டர். இதன் தலைமை பயிற்சியாளராக மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற முனைவர். செல்வகுமார் செயல்பட்டு வருகிறார்.
இவரது உடற்பயிற்சி கூடத்தினை இன்று அர்ஜுனா விருது, உலக ஆணழகன் உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சி விருதுகளை பெற்ற ரயில்வே ஊழியர் பாஸ்கரன் வருகை புரிந்தார்.
உடற்பயிற்சி கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன உடற்பயிற்சி இயந்திரங்களை பார்வையிட்டும் அதில் சில பயிற்சிகளும் மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை உடற்பயிற்சி செய்ய வந்த நபர்களுக்கும் அங்கு பணி புரியும் பயிற்சியாளர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன் , தற்போதைய காலகட்டத்தில் எந்த வித தீய பழக்கங்களுக்கும் அடிமைப்படாமல் இருக்க உடற்பயிற்சி பெரிதும் உதவுகிறது.
மேலும் உடற்பயிற்சி மையத்தில் சேருவதற்கு முன்பு தனது உடலை மருத்துவர் கொண்டு முறையாக பரிசோதித்து அவர் கூறும் ஆலோசனை ஏற்று பயிற்சி மையத்தில் இணைய வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைகளை பயிற்சியாளர் இடம் தெரிவித்து அதன்படி பயிற்சியாளர் முறையான பயிற்சிகளை கற்றுத் தருவார். தொடர் பயிற்சியே நல்ல உடல் விட காத்திரத்தையும் பல்வேறு போட்டிகளிலும் வெற்றியையும் பெற்று தரும்.
இந்நிலையில் தற்போது இதைத் தவிர்த்து ,உடனடியாக தனது உடலை திடகாத்திரமாக வைத்துக் கொள்ள பல்வேறு தவறான பாதைகளை உடற்பயிற்சி மேற்கொள்வோர் கையாள வேண்டாம் எனவும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு அனைவருக்கும் பெரும் சோகத்தை தற்போது ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து உடற்பயிற்சியை மேற்கொண்டு இன்று வரை நல்ல ஆரோக்கியத்துடனும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாகும் விளங்கிவரும் என் போல் பலர் உள்ளனர் எனவும், இளைஞர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கிறதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது உடற்பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர்கள், பயிற்சி இளைஞர்கள் என பல உடன் இருந்தனர்.