மதுரை:
மதுரை அருகே உலகனேரியில் உள்ள ஸ்ரீ தங்க முத்துமாரியம்மன் கோயிலில் 37 ம் ஆண்டின் பங்குனி மாத உற்சவ திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
இதில் ,வெள்ளிக்கிழமை இரவு அம்மன் அழைப்பு நிகழ்வு மேளத்தாளம் முழங்க, முளைப்பாரி ஊர்வலம் சக்தி கரகம் அக்னி சட்டி எடுத்தல் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. சனிக்கிழமை அன்று முக்கியமான வீதிகளில் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து சக்தி கரகம் அலங்கார குளத்தில் கரைத்தனர். முன்னதாக தங்க முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. கோயிலில் கும்மியடித்தும் பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தினர்.
திருவிழாவில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் உலகனேரி ஐந்து வீடு கிராமப் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.