Close
ஏப்ரல் 14, 2025 12:49 மணி

ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவில்களின் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முக்கியமான கோவில்களில் ஒன்று ஸ்ரீஅஷ்டபுஜ ஆதிகேசவப் பெருமாள் கோவிலும் ஒன்றாகும்.

திருமாலின் 108 திவ்ய தேசக் கோவில்களில் 44 வது திவ்ய தேச கோவிலாகும் இது . 108 திவ்ய தேச தலங்களில் இங்கு மட்டுமே பெருமாள் எட்டு கரங்களுடன் மூலஸ்தானத்தில் காட்சி தருகிறார்.

தொண்டை மண்டலத்தில் உள்ள வைணவ தலங்களில் இங்கு மட்டுமே பரமபத வாசல் உள்ளது. கஜேந்திர மோட்சம், விழாவாக கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் புகழ்பெற்ற இத்த திருக்கோயில் பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிறப்பு மலர் அலங்காரத்தில் எம்பெருமான் கொடி மரம் அருகே எழுந்தருள சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, கொடிபட்டம் நாதஸ்வரம், மேளதாளம் முழங்க திருக்கோயிலை வலம் வந்தது.

இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்குப் பின் பட்டாட்சியார்களால் பிரம்மோற்சவ விழா கொடி ஏற்றப்பட்டது.

முதல் நாள் காலை சப்பரத்தில் எம்பெருமான் எழும்பருள வீதி உலா நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்தம் சடாரி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது..

பிரமோற்சவ விழா ஏற்பாடுகளை அறங்காவலர் எஸ்.கே.பி.சந்தோஷ்குமார், செயல் அலுவலர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top