Close
ஏப்ரல் 14, 2025 5:38 மணி

‘பெண்கள் திமுகவுக்கு ஒரு ஒட்டுகூட போட மாட்டோம்’ என்று உறுதிமொழி ஏற்க வேண்டும் : ஆர்.பி. உதயகுமார் பேச்சு..!

கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார்

வாடிப்பட்டி.

மதுரை மாவட்டம் ,வாடிப் பட்டி தாலூகா அலங்காநல்லூர் ஒன்றியத்தில் , தனிச்சியம், மேல சின்னம்பட்டி புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் அ.திமு.க. பூத் கமிட்டி கிளை கழக கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா, மாநில நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, ராமகிருஷ்ணன், ஏ.கே.பி. சிவசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் திருப்பதி முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர் ,சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் உள்ள 68,500 வாக்குச்சாவடிகளும் பூத் கமிட்டி கிளை கழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மூன்று பெண்கள் உள்பட 9 பேர் இடம் பெறுவார்கள். நீங்கள் எல்லாம் மக்கள் பணி, தேர்தல் பணி, கழக பணி ஆகியவற்றை ராணுவ சிப்பாய் போல வாக்குச் சாவடிகளில் நம்மை எதிர்த்து நிற்கும் எதிரிகளை டெபாசிட் இழக்க செய்ய வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும்.

எடப்பாடியார் ஒரு மாபெரும் கூட்டணி அமையும் என்று சொன்னார் அதன்படி இன்றைக்கு தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்து விட்டது. இன்றைக்கு உள்துறை துறை அமைச்சர் அமித் ஷாஜி, கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் அற்புதமான கூட்டணி உருவாகிவிட்டது.

இந்த கூட்டணி தமிழக உரிமையை நிலைநாட்டும் கூட்டணியாகும். இன்றைக்கு தமிழகத்தில் ஊழல் அரசு, குடும்ப அரசு, வாரிசு அரசு நடைபெறுகிறது. இந்த அரசை அகற்ற வேண்டும் என்று நாட்டு மக்கள் உணர்ந்துள்ளார்கள் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் சேவை செய்ய அற்புதமான கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி உருவாகிவிட்டது.

இன்றைக்கு அதிமுகவிற்கு பூத் கமிட்டி மூலம் புதிய ரத்தம் பாய்ச்சபட்டு உள்ளது அதிமுக,பாஜக கூட்டணியால் மக்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்து விட்டது, இன்றைக்கு திமுக படைபலம் பண பலம், அதிகாரம் பலம் இவற்றை அச்சாரமாக வைத்து தான் திமுக செயல்படுகிறது ,இன்றைக்கு நிலைமை ஆட்டம் காண துவங்கி விட்டது.

தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. சட்டமன்றத்தில் எதையும் பேச முடியவில்லை, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவல்துறையே படுகொலை செய்யப்படுகிறார்கள், இதற்கு சட்டசபையில் பேச அனுமதி மறுக்கிறார்கள் அப்படி என்றால் இது குறித்து, எங்கே போய் பேசவது. இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட உங்களால் மட்டும் தான் முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அரியூர் ராதாகிருஷ்ணன்,கொரியர் கணேசன்,மாவட்ட அணி நிர்வாகிகள் ,துரைப்பாண்டி, சிங்கராஜ் பாண்டியன், சரவண பாண்டி, சிவசக்தி,மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மனோகரன், வாவிடமருதூர் குமார்,முடுவார்பட்டி ஜெயச்சந்திரன் மணியன், குருவித்துறை காசிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ,புதுப்பட்டி கிளைச் செயலாளர் பாண்டுரங்கன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top